வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (14:40 IST)

கேரளா: சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Chettinad Chicken Biryani
கேரள மாநிலம் பட்டினம் திட்டாவில் ஹோட்டலில் ஆர்டர் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணணி சாப்பிட்ட 13 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா ரோஸ் டேல் குடியிருப்புப் பகுதியில்  ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.

பள்ளி ஆண்டுவிழாவை முன்னிட்டு, பள்ளி நிர்வாகம், கொடுவள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த பிரியாணி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட பின், அதைச் சாப்பிட்ட  13 மாணவர்கள் மற்றும் ஆசிரியைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து., இவர்கள் அனைவரும் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகிறது.