1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 20 ஜூன் 2025 (18:00 IST)

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், காதலர்கள் ஜன்னல் ஸ்கிரீனை மூடாமல் உடலுறவில் ஈடுபட்ட நிலையில், வெளியிலிருந்து அதை பார்க்க கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தனிப்பட்டவர்களின் உறவை எப்படி வெளியில் உள்ளவர்கள் வீடியோ எடுக்கலாம் என்று கருத்துகள் பகிரப்பட்டு வருவது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில், காதலர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் கணவன் மனைவி போல் உடலுறவில் ஈடுபட்டபோது, ஜன்னல் ஸ்கிரீனை மூடாமல் இருந்ததால், அவர்களின் செயல்கள் வெளியில் இருந்து தெளிவாக தெரிந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
 
மேலும், ஹோட்டலுக்கு வெளியே இந்த ஆபாச காட்சியைப் பார்க்க ஒரு பெரிய கூட்டம் கூடியதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காதலர்கள் தங்கியிருந்த அறையை தட்டி, ஜன்னல் ஸ்கிரீனை மூட செய்தனர். மேலும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
 
இந்த நிலையில், இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தனிநபர்களின் தனியுரிமையை மீறியது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.