1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (17:22 IST)

ரூ.70,000 செலவு செய்து என்னை காப்பாற்றினார்கள்: இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்

alphonse
ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என்னை, என்னுடைய பெற்றோர் 70 ஆயிரம் செலவு செய்து காப்பாற்றினார்கள் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட 20 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும், இதில்  நர்ஸ் ஒருவர் பலியானார் என்றும் செய்தி வெளியானது.
 
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது; 15 ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் வாங்கி கொடுத்த ஷவர்மாவை சாப்பிட்டு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போதே என்னை ரூ.70 ஆயிரம் செலவு செய்து என் பெற்றோர்கள் காப்பாற்றினார்கள்
 
எனவே கெட்டுப்போன அசுத்தமான உணவை சாப்பிடுவதில் இருந்து விழிப்புணர்வுடன் இருங்கள், வாழ்க்கை மிகவும் உயர்ந்தது என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
 
 
Edited by Mahendran