திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (22:16 IST)

நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி

அதிமுக ஆட்சி குறித்து தவறாக விமர்சனம் செய்பவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசிய அமைச்சர் துரைக்கண்ணு இன்று அந்தர்பல்டியாக நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அறுத்துவிடுவேன் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நேற்று தஞ்சையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுக தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக. அதிமுக அரசை பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்' என்று ஆவேசமாக பேசினார்.

ஒரு அமைச்சர் இவ்வாறு வரம்பு மீறி பேசியது குறித்து அனைத்து தரப்பினர்களிடம் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களும்  அமைச்சர் அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கூறினர்

இதனையடுத்து தமிழக அரசை பற்றி யாரேனும் குற்றம் சொன்னால், அவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக நாக்கை வெட்டிவிடுவேன் என தவறுதலாக கூறிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு அந்தர் பல்டி அடித்திருக்கிறார்