திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (20:52 IST)

1914ஆம் ஆண்டில் அதிமுக வெற்றி பெற்றது: இது பிரிட்டிஷ்காரனுக்கு தெரியுமா அமைச்சரே?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பத்திரிகையாளர்களிடம் பேசாத அதிமுக அமைச்சர்கள் அவருடைய மறைவிற்கு பின்னர் அவ்வப்போது உளறலுடன் பேசி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தனது உளறல் பேச்சால் பல்வேறு தர்மசங்கடங்களை அனுபவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றும் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது உளறியுள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, '1914ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களில் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது உங்களுக்கு தெரியும்' என்று பேசினார்.

1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நடந்து வந்தது என்பதால் இந்த விஷயம் பிரிட்டிஷ்காரனுக்கு தெரியுமா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் என்று கூறுவதற்கு பதிலாக 1914 என்று அமைச்சர் தவறாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது