தொடர்புடைய செய்திகள்
- தாய்பாலிலும் கலந்துவிட்ட ப்ளாஸ்டிக் துகள்கள்! – அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்!
- ஆட்சியர் அலுவலகம் முன்பு மீன் பிடித்து போராட்டம்!
- உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள தேங்காய் பால் !!
- ஹிஜாப் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி- ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி
- புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்!
தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம்
தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு லிட்டர் பசும்பால் ரூபாய் 42க்கும் ஒரு லிட்டர் எருமைப்பால் ரூபாய் 50ல்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து பல மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது
ஆனால் இது குறித்து இன்னும் பேச்சு வார்த்தை கூட தமிழக அரசு அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran
