வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (14:51 IST)

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா தேதி அறிவிப்பு

charles
இங்கிலாந்து மன்னராக சார்லஸின் முடிசூட்டுவிழா அடுத்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து அரச குடும்பம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  2023-ம் ஆண்டு மே 26ஆம் தேதி சனிக்கிழமை மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறும். இந்த விழாவில் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவியுடன் முடிசூட்டி கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மன்னராக முடிசூட்ட இருக்கும் சார்லஸ் அவர்களுக்கு தற்போது 74 வயதாகும் நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் அதிக வயதான நபர் ஒருவர் மன்னராக முடிசூட்டப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தனது 96 ஆவது வயதில் காலமான நிலையில் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே

Edited by Mahendran