1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mildest rain continues February 14

பிப்ரவரி 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Rain
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பிப்ரவரி 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. எனினும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வபோது சில இடங்களில் மழை பெய்வதும் தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி பிப்ரவரி 14 வரை வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான அளவு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்தது மதிமுக! – வைகோ அறிவிப்பு!