செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:25 IST)

பெட்ரோல் குண்டு வீச்சு.. திமுக முன்னரே செய்தது..! – கராத்தே தியாகராஜன் ஆவேசம்!

சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை தி நகரில் கமலாலயம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு நேரத்தில் 3 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி மர்ம நபர் கமலாலயம் மீது வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வினோத் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக கராத்தே தியாகராஜன் “15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் திமுகவுடன் பங்களிப்புடன் நடந்தது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயலை கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷயங்களுக்கு பாஜகவினர் பயப்படமாட்டோம்” என்று கூறியுள்ளார்.