1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (19:31 IST)

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
 
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை அதிகாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
 
இதனை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கரையோர மக்கள் தாழ்வான பகுதியில் இருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாறிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்ட பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது