வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:28 IST)

விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்தது: விவசாயிகள் கவலை!

விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்தது: விவசாயிகள் கவலை!
விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் அணை உடைந்ததால் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் 25 கோடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடுப்பு அணை கட்டப்பட்டது
 
தளவானூர் தடுப்பணை கட்டிய மூன்று மாதத்தில் அணையின் மதகு உடைந்து சேதமடைந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணை உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறி வருகிறது
 
இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்த நிலையில் தற்போது இந்த அணை உடைந்து உள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது