1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (15:02 IST)

14 ஆம் தேதி கண்டன நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் - சீமான் அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது என சீமான் அறிவிப்பு. 

 
முல்லை பெரியார் அணை வலுவற்று இருப்பதாகவும் அதனால் அதன் கொள்ளளவை குறைக்க வேண்டுமென்றும் நீண்ட நாட்களாக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் அடாவடிச் செயலில் ஈடுபட்டுள்ளது.
 
இதனை தடுக்கத்தவறிய திமுக அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில், தேனி பங்களாமேடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசிற்கு உணர்த்திட வேண்டுமாய் அறிவுறுத்துகிறேன் என கோரியுள்ளார்.