வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (13:05 IST)

நாளை முதல் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை.. முழு விவரங்கள்..!

தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் கூடுதல் மெட்ரோ சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளி தொடர்பு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாலை நேரத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

நீடிக்கப்பட்ட நெரிசல்மிக்க நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயிலின் இரண்டு தடங்களிலும் 9 நிமிட இடைவேளைக்கு பதிலாக ஆறு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சிரமம் இல்லாத வகையில் பயணம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை நவம்பர் 9, நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Edited by Mahendran