வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (11:41 IST)

கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே

Train
தீபாவளியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:

1. நவம்பர் 9ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

2. நவம்பர் 10, 17, 24 ஆகிய மூன்று நாட்கள் தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில்

3. நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு 7, 14, 21 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

4/ திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 9, 16, 23 ஆகிய மூன்று நாட்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வேகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சிறப்பு ரயில்களின் நேரம் குறித்து ரயில்வே இணையதளம் மற்றும் செயலியில் அறிந்து கொள்ளலாம்.

Edited by Mahendran