தொடர்புடைய செய்திகள்
- மனக்கஷ்டமா இருக்கா.. மகிழ்ச்சியா இல்லையா? சம்பளத்துடன் விடுமுறை! – சீனாவை கலக்கிய தொழிலதிபரின் அறிவிப்பு!
- நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..!
- சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு! எத்தனை நாட்கள்?
- கோடைவிடுமுறையை ’குரங்கு பெடல்’ போட்டு கொண்டாடலாம்! – 90ஸ் கிட்ஸை மயக்கும் ட்ரெய்லர்!
- சென்னை - திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்.. சோதனை ஓட்டம் ஆரம்பம்..!
நாளை மே தின விடுமுறை நாள்: சென்னை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!
நாளை மே தினம் விடுமுறை என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு விடுமுறை தினங்களில் மெட்ரோ ரயில்கள் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நாளை விடுமுறை தினத்தை சென்னையில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளைய தினம் நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல் இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
