வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (08:07 IST)

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு! எத்தனை நாட்கள்?

highcourt
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை குறித்து அறிவிப்பு சற்றுமுன் வழியாக உள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது போலவே நீதிமன்றத்திற்கும் கோடை விடுமுறையை அளிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதை தெரிந்தது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதாவது மே 1 முதல் கோடை விடுமுறை என்றும் ஜூன் 2ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதத்திற்கு உயர் நீதிமன்றம் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அவசரகால வழக்குகளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் தாக்கல் செய்யலாம் என்றும் விடுமுறை கால அவசர வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகள் மட்டும் விசாரணை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva