செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (20:25 IST)

காணும் பொங்கல் கொண்டாட்டம்; மெரினாவில் அகற்றப்பட்ட டன் கணக்கான குப்பைகள்

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் அங்கே விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் கிடந்த 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே போல் பெசண்ட் நகர் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.