புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (19:45 IST)

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், சத்துணவு மையங்களிலும், பள்ளிகளிலும், அங்கன் வாடி உட்பட பல முக்கிய இடங்களிலும் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

மேலும் புலம்பெயர் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. காலை 7 மணி முதல் 5 மணி வரை சொட்டு மருந்து முகாம்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.