செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (15:24 IST)

உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது: திமுக – காங் குறித்து ஜெயக்குமார்

காங்கிரஸ் – திமுக இடையேயான உறவு என்பது உடைந்த கண்ணாடி போன்றது என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையும், அதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் ஆற்றிய எதிர் வினையும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து திமுக – காங்கிரஸ் இடையே மோதல் உருவாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி கருத்தியல்ரீதியாக திமுக – காங்கிரஸ் பெரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கூட்டணி அமைத்து செயல்படுவோம் எனவும் கூறியிருந்தார்.

திமுக – காங்கிரஸ் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”காங்கிரஸ் – திமுக கூட்டணி என்பது உடைந்த கண்ணாடி போன்றது. எவ்வளவு நாள் அதை ஒட்ட வைத்து அழகு பார்த்தாலும் அது உடைந்துதான் போகும்” என கூறியுள்ளார்.