ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (14:10 IST)

அவரு சொன்ன மாறி ஒன்னும் நடக்கல... கமலுக்கு பல்ப் கொடுத்த அழகிரி!

பதிலளித்த கே.எஸ்.அழகிரி கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். 
 
கடந்த சில நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசும் பேச்சுகள் அவ்விரு கட்சிகளுக்கும் சுமுகமான உறவு இல்லை என்பதைக் காட்டுகிறது. 
 
இதனைத்தொடர்ந்து, திமுக காங்கிரஸ் மோதல் குறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் இன்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல், நான் ஏற்கனவே சொல்லியது போல இரு கட்சிகளுக்கும் இடையில் விரிசல் எழுந்துள்ளது எனப் பதிலளித்தார்.
 
இந்நிலையில்,  திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். 
 
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக – காங்கிரஸில் எந்த விரிசலும் இல்லை. அடிக்கடி இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவது இயல்புதான். கொள்கைரீதியாக திமுக – காங்கிரஸ் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அதை யாராலும் தகர்க்க முடியாது என்று கூறினார்.
 
அதோடு இல்லாமல், பதிலளித்த கே.எஸ்.அழகிரி கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். மதசார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கமல் பாஜக ஆதரவாளர் ரஜினியின் உதவியை நாடுவது ஏன்? என்றும்  கேள்வி எழுப்பினார்.