வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மே 2024 (08:35 IST)

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

காலை 10 மணி   வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை மாநில ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இந்த மழை காலை 10 மணி வரை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது/ அதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்யும் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் இதன் காரணமாக குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva