திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 மே 2024 (09:12 IST)

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Chennai Rain
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் கன மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மதுரை உள்பட ஒருசில தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதாகவும் இதனால் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து கோடை வெயிலிலிருந்து விடுதலை பெற்றதாக பொதுமக்கள் கருதி வருகின்றனர்.
 
Edited by Siva