1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain chances districts chennai meteorological center statement

அடுத்த 7 நாட்களில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை? வானிலை ஆய்வு மையம்..!

Chennai Rain
தமிழ்நாட்டில் அவ்வப்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஏழு நாட்களில் எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபாடு நிலவும் காரணத்தால் குமரி கடல் பகுதியில் மழை பெய்யும் என்று கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் இன்று புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
 
இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இருப்பினும் சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் வறண்ட வானிலை இருக்கும் என்றும் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பேருந்தை பெட்ரூமாக மாற்றிய காதல் ஜோடி.. சக பயணிகள் அதிர்ச்சி..!