திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:56 IST)

நடு ரோட்டில் காரை நிறுத்த சரக்கடித்த கும்பல்… தட்டிக்கேட்ட நபருக்கு அடி!

சென்னைக்கு அருகே பனையூரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதற்கு வந்த சிலர் சாலையிலேயே காரை நிறுத்தி மது அருந்தியுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், பண்ணை வீடு ஒன்றில் திருமண விழாவுக்கு வந்த சிலர் நடுசாலையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கவின் என்பவர் அவர்களை தட்டிக்கேட்க அந்த கும்பல அவரைத் தாக்க தொடங்கியுள்ளது.

இதைப்பார்த்த அந்த ஊர் மக்கள் அந்தக்  கும்பல் மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சுரேந்தர் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மோதல் பெரிதானதை அடுத்து அந்த பகுதியில் போலிஸாரால் குவிக்கப்பட்டுள்ளனர்.