செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (08:23 IST)

பத்ம விருதை யாருக்கு வழங்கலாம்? நீங்களே சொல்லுங்க! – மக்களிடம் கேட்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கலை, இலக்கியம், சினிமா, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தின்போது வழங்கப்படும்.

இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் “பத்ம விருதுகளை மக்கள் விருதாக மாற்ற மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது. எனவே, பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடையே பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனையாளர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு சிபாரிசு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான விவரங்கள் பத்ம விருதுகளுக்கான அதிகார்ப்பூர்வ வலைதளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.