1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. meesai rajendiran explain why he quit dmdk

தேமுதிக பிரேமலதா கையில் இல்லை!.. மீசை ராஜேந்திரன் பகீர் பேட்டி!...

meesai
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், காமெடி வேடங்களிலும் நடித்தவர் மீசை ராஜேந்திரன். விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். விஜயகாந்த் மறைவுக்குப் பின் அவரைப்பற்றி பல விஷயங்களை ஊடகங்களில் தொடர்ந்து பேசி வந்தார்.. தேமுதிகவில் செய்தியை தொடர்பாளராகவும் இவர் இருந்திருக்கிறார்.. மேலும் மூன்று முறை தேமுதிக சார்பாக இவர் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்..

இந்நிலையில், திடீரென அவர் தேமுதிகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளர். அதன்பின் செய்தியாளிடம் பேசிய மீசை ராஜேந்திரன் ‘தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்பதற்காக நான் திமுகவிலிருந்து விலகி விட்டதாக சொல்கிறார்கள்.. அதில் உண்மை இல்லை.. 2011ம் வருடம் கூட எனக்கு சீட் கொடுக்கவில்லை.. அப்போது நான் தேமுதிகவில்தான் இருந்தேன்.. தற்போது தேமுதிக அண்ணியாரின் (பிரேமலதா) கையில் இல்லை என எனக்கு தோன்றுகிறது.. திமுகவுடன் கூட்டணி வைத்ததிலும் எனக்கு உடன்பாடு இல்லை.. கேப்டன் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு திமுகவும் ஒரு காரணம் என்ன நான் நம்புகிறேன்..

தற்போதைய தேமுதிகவில் உண்மைக்கும் உழைப்பிற்கும் பல வருட சீனியாரிட்டிக்கும் மரியாதை இல்லை. புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.. கட்சியில் பல வருடங்கள் இருந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. நான் யாரிடமோ 5 லட்சம் பணம் வாங்கி விட்டதாக ஒரு மாவட்ட செயலாளர் அண்ணியாரிடம் புகார் கொடுத்தார்.

உண்மையில் நான் எந்த பணமும் வாங்கவில்லை. இதே கேப்டன் இருந்திருந்தால் அவன் அப்படி செய்திருக்க மாட்டான் என்று சொல்லியிருப்பார்.. ஆனால் இப்போது இருப்பவர்கள் அப்படி இல்லை.. இப்படி ஒரு பல காரணங்களால்தான் இந்த கட்சியிலிருந்து விலகினேன்’ எனக் கூறியிருக்கிறார். அதோடு, அதிமுகவிலும் மீசை ராஜேந்திரன் இணைந்துவிட்டார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அலுவலகம் வந்து வேலை பார்த்தால் கூடுதல் சம்பளம், சலுகைகள்.. அறிவித்த மறுநாளே Work From Homeஐ கைவிட்ட ஊழியர்கள்..!