வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:47 IST)

2 வழக்குகளில் மீரா மிதுனுக்கு ஜாமீன்!

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமீன் தாக்கல் செய்தால், ஆனால அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
 
பின்னர் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை மீரா மிதுன் மீது பதியப்பட்ட மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.  மொத்தம் 4 வழக்குகளில் கைதான நிலையில் 3 வழக்குகளில் மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஓட்டல் நிர்வாகி ஊழியரை மிரட்டியதாக எழும்பூர் போலீஸ் பதிவு செய்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான விசாரணைக்கு வருகிற 14-ம்தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர் போலீசார் நடிகை மீரா மிதுனை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.