வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (12:39 IST)

பேர் சொல்ல சொன்ன விஜேவை தன் பாணியில் கலாய்த்த வடிவேலு - வீடியோ!

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 
 
ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது. பல வருடங்களாக நடிக்காமல் இருந்தாலும் அவரை மீம்ஸ் கிரியேட்டர்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் நடிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி எப்படியாவது விரைவில் ஒப்பனை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ள வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் நடிக்கிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில் விஜே அகல்யா வெங்கடேசன் நடிகர் வடிவேலு சந்தித்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் தொகுப்பாளினி ஒரே ஒரு முறை எனது பெயரை சொல்லுங்கள் என கூறியதும் வடிவேலு கலாய்ப்பது போன்றே அவரது ஸ்டைலில் அகல்யா வெங்கடேசன் என உச்சரித்த வீடியோ சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது.