1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:14 IST)

ஆபத்தான சுவரில் மல்லாக்க படுத்திருக்கும் ராய் லட்சுமி!

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.
இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். 
 
அப்படி காட்டியும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை இருந்தும் அம்மணி முயற்சியை கைவிடாமல் இருக்கிறார். தற்போது பிகினியில் கவர்ச்சியான மாடர்ன் உடையணிந்து ஒற்றை சுவற்றில் மல்லாக்க படுத்தவாறு போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.