1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Meera Mithun get bail for two cases

2 வழக்குகளிலும் ஜாமின் பெற்ற மீராமிதுன்: வெளியே வருவது எப்போது?

மீராமிதுன்
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மற்றும் நட்சத்திர ஹோட்டல் மேனேஜரை மிரட்டியது ஆகிய இரண்டு வழக்குகளில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளிலும் இருந்தும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான மீராமிதுன் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஓட்டல் மேனேஜர் ஒருவரை மிரட்டும் வகையில் மீராமிதுன் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் மீராமிதுன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரண்டு வழக்குகளிலும் நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை அடுத்து அவர் இன்னும் சில மணி நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
போதைப்பொருள் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான ரகுல் ப்ரீத் சிங்!