வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (19:46 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக ஆதரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக ஆதரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருதுகணேஷுக்கு ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மதிமுகவும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இன்று சென்னையில் மதிமுகவின் தலைமை அலுவலகமான 'தாயகம்' அலுவலகத்தில் மதிமுகவின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வைகோ அறிவித்தார்

தமிழக மக்கள் நலன் கருதி திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதிமுக முழு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், திமுக வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்றும்,  நல்லிணக்க சூழல் ஏற்படும் தருணத்தில் திமுக - மதிமுக கூட்டணிக்கான ஒரு தொடக்கப்புள்ளி என இதனை கருதலாம் என்றும் வைகோ செய்தியாலர்களிடம் தெரிவித்தார்.