ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 டிசம்பர் 2017 (15:41 IST)

தொடர் கொலை மிரட்டல்; தலைமறைவான அம்ருத்தா?

நான் ஜெயலலிதாவின் மகள் கூறிய அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டலை அடுத்து அவர் பெங்களூரு திரும்பினார்.


 
பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்றும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரர் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது.
 
இதையடுத்து அம்ருத்தாவுக்கு வந்த தொடர் கொலை மிரட்டல் காரணமாக அவர் தலைமறைவாகிவிட்டார். சென்னையில் தங்கியிருந்தவர் வழக்கறிஞர்களுடன் அலோசனை நடத்திவிட்டு பெங்களூரு திரும்பிவிட்டார். இதையடுத்து அவர் விரைவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. மேலும் அம்ருத்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து உளவுத்துறை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.