ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 டிசம்பர் 2017 (17:04 IST)

தமிழகத்தில் பாஜக டம்மி; மறைமுகமாக சாடிய அதிமுக எம்பி

தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என்றும் அவர்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்றும் அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். பாஜக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் ஆர்.கே.நகரில் போட்டியிடும் மதுசூதனனை சந்தித்து பேசினார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் கூறியதாவது:-
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவால். ஆர்.கே.நகரில் அதிமுக வெற்றிப் பெற பாஜக உதவி தேவையில்லை. தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை என்று கூறியுள்ளார்.