1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (14:12 IST)

எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான தேர்வு: விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு..!

எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான  நுழைவுத் தேர்வுகளுக்கு இன்று  முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
 எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வில்கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிலையில்  2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும் சீட்டா தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது.
 
இந்த தேர்வுகளுக்கு இன்று முதல்  இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.  https://tancet.annauniv.edu/tancet என்னும் வலைத்தளம் மூலம் பிப்ரவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும் என்றும், தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட மேற்கண்ட  வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva