செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (07:59 IST)

வெறும் 10 நாட்களில் எம்பிஏ படிப்பு.. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் எச்சரிக்கை..!

வெறும் 10 நாட்களில் எம்பிஏ முடிக்கலாம் என்று ஒரு சில நிறுவனங்கள் விளம்பரம் செய்வதை நம்ப வேண்டாம் என மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெறும் 10 நாட்களில் குறுகிய கால எம்பிஏ படிப்பு வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றி ஒரு சில கல்வி நிறுவனங்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த குறுகிய கால எம்பிஏ படிப்புகள் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி ஆகும்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் அனுமதியின்றி எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே எம்பிஏ என்பது 2 ஆண்டு முதுநிலை படிப்பு, இது வணிகம் மற்றும் மேலாண்மைக் கூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்து நவீன திறன்களை தனிநபர் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

எனவே எம்பிஏ படிப்பை 10 நாட்களில் முடிக்க முடியாது என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு மோசடியான கல்வி நிறுவனங்களில் சேர வேண்டாம். இதுகுறித்த தகவல் அறிய  https://www.aicte-india.org/ சென்று பார்க்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.

Edited by Siva