திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (13:02 IST)

அதிகபட்ச வெப்பநிலை.! இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்த சேலம்..!

இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் சேலம் 3வது இடத்தை பிடித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை மழை சில இடங்களில் பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் என்பது தணிந்தது. ஆனால் தற்போது மீண்டும் வெப்பநிலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
 
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் சேலம் 3வது இடத்தை பிடித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நேற்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

 
நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.