திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (09:12 IST)

இன்ஸ்டாகிராம் இளைஞரோடு காதல்.. குழந்தைகளை அனாதையாக விட்டு ஓடிய தாய்!

சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவரோடு காதலில் விழுந்த பெண் தான் பெற்ற குழந்தைகளை நிர்கதியாக விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்ஸ்டாகிராம் மோகம் இளைஞர்கள் தொடங்கி பலரையும் ஆட்டுவித்து வருகிறது. சில சமயம் இந்த இன்ஸ்டாகிராம் பழக்கங்கள் ஆபத்திலும் முடிந்து விடுகிறது. சேலத்தில் ஓமலூர் அருகே உள்ள கிழக்கூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சுதர்சனா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சுதர்சனா அதிகமாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் பலருடனும் அவர் பேசி வந்த நிலையில் மேச்சேரி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பவருடன் அதிகம் பேசி வந்துள்ளார். நாளடைவில் அவரது இன்ஸ்டாகிராம் மோகம் குறித்து கணவர் கார்த்தி கண்டித்து வந்துள்ளார்.


இதனால் சுதர்சனா சமீபத்தில் குழந்தைகளை நிர்கதியாக விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதுகுறித்து கார்த்தில் போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் சுதர்சனா தனது இன்ஸ்டாகிராம் காதலன் மாதேஸுடன் ஓடியதும், தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் காதலனுக்காக பெற்ற குழந்தைகளையே தவிக்கவிட்டு விட்டு தாய் ஓடிவிட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K