வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (01:26 IST)

திருமாவளவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரசாரம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் திமுக இணைந்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் அக்கட்சியின் தலைமையில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி, வேட்பு மானுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில், காட்டுமன்னார் கோயிலில் அமைச்சர் உதய நிதி பிரசராம் மேற்கொண்டார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
சமூகநீதி பேணி, சமத்துவத்தை நிலைநாட்டிட எந்நாளும் ஓங்கி ஒலித்திடும் நம் தோழமைக்குரல்கள், நாட்டின் சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றத்திலும் ஒலித்திட வேண்டும்.

அதை உறுதிசெய்யும் விதமாக சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவிலில் நம் இந்தியா கூட்டணி வேட்பாளர் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களை ஆதரித்து, பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.

சின்னத்திற்கான சட்டப்போராட்ட வெற்றி முதல்கட்டமானது தான்; தேர்தல் வெற்றி மூலம் அதனை முழுமையடையச் செய்திட பானை சின்னத்தில் வாக்களித்திடுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டோம்.