வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (08:50 IST)

இன்று முதல் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம்!

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் இருந்த அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்லூரி மாணவர்கள் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது. இளநிலை முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவர்கள் தற்போது விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று முதல் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாணவர்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 www.tngasapg.in, www.tngasapg.org  ஆகிய இரண்டு இணையதளங்களில் மாணவர்கள் எம்ஏ, எம்காம், எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த விண்ணப்பத்தை பதிவு செய்யும்போது ரூபாய் 58 கட்டணம் கட்டவேண்டும் என்றும் ரூபாய் இரண்டு பதிவு கட்டணம் என மொத்தம் 60 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது