வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (11:41 IST)

சிறுவர்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்துக்கு விண்ணப்பித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது. 
 
மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலையில் இந்த தடுப்பூசி ஒரே டோசில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
 
ஆம், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்துக்கு விண்ணப்பித்துள்ளது. 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களிடம் தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.