தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் 100 நிகழ்ச்சியை எம்ஜிஆர் நினைவு தினத்தில் வைத்தது ஏன்? புளூசட்டை மாறன்..!
- எதற்கு சினிமா மேடைகளிலும், பேட்டிகளிலும், படங்களிலும்..உத்தமன் வேடம்? -புளூ சட்டை மாறன்
- காய்ச்சல், சளி பிரச்சினைகளுக்கான 61 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- கோவையில் குண்டு வெடிக்கவுள்ளதாக மர்மநபர் மிரட்டல்: கமிஷனர் விளக்கம்
- தமிழக அரசின் அரசாணைகளை மதிக்காத பிரபல தியேட்டர்? புளூ சட்டை மாறன்
கோவையில் மாஸ்க் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!
கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுவெளியில் செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகிய பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எனவே காய்ச்சல் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
