செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (13:56 IST)

சுற்றி வளைத்த வனத்துறை; கம்பி நீட்டிய டி23 புலி! – பீதியில் மக்கள்!

சுற்றி வளைத்த வனத்துறை; கம்பி நீட்டிய டி23 புலி! – பீதியில் மக்கள்!
நீலகிரி சிங்காரா வனப்பகுதியில் சுற்றி வரும் புலியை வனத்துறை சுற்றி வளைத்த நிலையில் மீண்டும் கம்பி நீட்டியது.

நீலகிரி மசினக்குடி பகுதியில் சுற்றி வரும் டி23 புலி நான்கு பேரை கொன்றுள்ள நிலையில் அதை பிடிக்கும் முயற்சியில் கடந்த 11 நாட்களாக வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த புலி ஆட்கொல்லியாக இல்லாமல் இருக்கலாம் எனவே கொல்ல வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று புலியின் வழித்தடத்தை கண்டறிந்து சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சிக்காமல் மீண்டும் டி23 தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டி23 புலி எந்த பக்கம் நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.