1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:52 IST)

பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்! – அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

விழுப்புரத்தில் பேனர் வைக்கும்போது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைத்தபோது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் விளக்கமளித்த தமிழக அரசு ”ஏற்கனவே பேனர் கலாச்சாரத்தை தொடர வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதையும், பேனர்கள் வைக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு தான் செல்வதில்லை என அறிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் விதமாக சட்டங்கள் அமைக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.