1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Maridass case dismissed by Madurai sub court

யூட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! – மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு!

Tamilnadu
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அமைதியை குலைக்கும் விதமாக பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபல யூட்யூபரும் அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பொது அமைதியை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தனியார் தொலைகாட்சி பெயரில் போலி இ-மெயில் காண்பித்தது உள்ளிட்ட வேறு சில வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் 27ம் தேதிவரை சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது பதிந்த வழக்கு செல்லாது என கூறி வழக்கை ரத்து செய்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸ்: ஒமிக்ரான் திரிபால் மூன்றாம் அலை ஏற்படுமா? அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறது இந்தியா?