1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (12:57 IST)

ஒரு பேய் பங்களாவின் பேரமைதி: கொரோனா வார்ட் குறித்து வேதனையில் மனுஷ்ய புத்திரன்!

எழுத்தாளரும் திமுக ஆதரவாளருமான மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.  
 
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் தினமும் சராசரியாக 60 பேர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி எழுத்தாளரும் திமுக ஆதரவாளருமான மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான்கு மாதத்தில் கொரோனா பற்றி எவ்வளவோ எழுதிவிட்டேன். ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன். மிகவும் கவனமாக இருந்தும் எப்படி எனக்குத் தொற்று ஏற்பட்டது எனத் தெரியவில்லை. 
 
எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது வருத்தமாக உள்ளது. கொரோனா வார்டின் முதல் நாள் அனுபவமே வெகு சிறப்பாக உள்ளது. பாத்ரூமில் வீல்சேர் நுழையவில்லை. ஒரு தலையணை கேட்டிருந்தேன் ஐந்து மணி நேரம் கழிந்துதான் கிடைத்தது. 
 
ஒரு பேய் பங்களாவின் பேரமைதி. இவ்வளவு வசதியின்மைக்கு நடுவே என்னை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். கொரோனாவைவிட இதுதான் கொடுமையாக இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். விரைவில் மீண்டு வருவேன் எனக் கூறியுள்ளார்.