ரகசிய காதலனோடு கொரோனா வார்டில் கொண்டாட்டம்! தனிமைப்படுத்தப்பட்ட பெண் போலீஸ்!
மும்பையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் தனது ரகசிய காதலனையும் வார்டிற்குள் கொண்டு வந்து தங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கொரோனா முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்தார் சிலரும் அவர்களோடே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர் தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியதால் தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நபரை அழைத்து வந்து பெண் போலீஸுடன் முகாமில் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார், அதில் தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தன் கணவரை கொரோனா தொற்று இருப்பதாக கொண்டு சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரும்படியும் கோரியுள்ளார்.
அந்த தபால் நிலைய ஆசாமி பெண் போலிஸின் கணவர் என்று சொல்லியிருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார் விசாரித்ததில் அந்த பெண் போலீஸுக்கு திருமணமே ஆகவில்லை என தெரிய வந்துள்ளது. தபால் நிலைய ஆசாமி திருமணமானவர் என்றாலும் அவருக்கும், அந்த பெண் போலீஸுக்கும் இடையே ரகசிய காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாக இருக்க இந்த கொரோனா தனிமைப்படுத்தலை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதை அறிந்த நிர்வாகம் பெண் போலீஸையும், தபால் நிலைய ஆசாமியையும் தனித்தனி கொரோனா வார்டுகளுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.