திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:37 IST)

சென்னையை நோக்கி வரும் புயல்: தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை!

TN assembly
சென்னையை நோக்கி புயல் வந்து கொண்டிருக்கும் நிலையில் தான் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விரைவில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புதுவை இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னையில் மிக மிக அதிக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது
 
இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தென் மண்டல வானிலை மண்டல செயலாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
புயலால் ஏற்படும் சேதம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva