தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்.. என்ன பெயர் தெரியுமா?
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
அந்தமான் அருகே உருவாகிய இந்த புதிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 8ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது திருவாரூர் அரியலூர் தூத்துக்குடி ராமநாதபுரம் நாகப்பட்டினம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இதுவரை நல்ல பெய்து வரும் நல்ல மழை பெய்து உள்ளதாகவும் புயல் காரணமாக அதிக மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Edited by Siva