புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (16:04 IST)

ஆட்டுக்கறி கேட்டு தாக்கிய போலீஸ்காரர் ’டிரான்ஸ்பர் '...

சேலம் அருகே கம்மாளப்பட்டி  பகுதியைச் சேந்தவர் மூக்குத்தி கவுண்டர் . சேலம் அன்னதானப்பட்டியில் காவல் நிலையத்திற்கு அருகே கறிக்கடை வைத்து நடத்து வருகிறார். அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலிஸ்காரர் 2 கிலோ ஆட்டுக்கறியை கேட்டதாகவும், அதற்கான பணத்தை கடைக்காரர் மூக்குத்தி  கேட்கும் போது போலீஸ்காரர் அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மூக்குத்தியின் மகன் விஜயகுமார் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்த போது, அவரையும் போலிஸார் கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.
 
இதைத்தொடர்ந்து  முதியவரையும், அவரது மகனையும் தாக்கிய சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்  சிவபெருமான், பாலசுப்பிரமணியம் ஆகியோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
 
மேலும் மூக்குத்தி என்பவரின் மனைவி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததில் கூறியுள்ளதாவது:
 
போலீஸார் அறைந்ததில் என் மகன் விஜயகுமாருக்கு காது சவ்வில் ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் என் மகன் சிகிச்சைக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
இதனையடுத்து  சப் இன்ஸ்பெக்டர் பாலசுபிரமணியம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றத்திற்கு இடமாற்றம் செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.