திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (15:10 IST)

சபரிமலைக்கு சென்ற மருமகளை தாக்கிய மாமியார்

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பெண் இரு வாரங்களுக்கு பின்னர் போலீஸாரின் பாதுகாப்பில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் மாமியார் அடித்ததாக தெரிகிறது.
சென்ற வருடம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என  தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
 
இதனையடுத்து  பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் பகதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கனகதுர்கா என்பவரும் பிந்து என்பவரும்  சபரிமலைக்கு சென்றுவிட்டு தன் வீட்டுக்கு வந்தபோது அவரது மாமியார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பதிலுக்கு கனகதுர்காவும் மாமியாரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர். தற்போது இருவரும் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.